×

பொதக்குடி மையவாடியில் மழை நீர் தேங்கி சேதமான சாலை சீரமைக்க வேண்டும்

 

நீடாமங்கலம், நவ. 19: பொதக்குடி மையவாடியில் மழை நீர் தேங்கிய சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீடாமங்கலம் அருகே பொதக்குடி ஊராட்சி பகுதியில் சடலங்களை இடுகாடுக்கு (மையவாடி) அடக்கம் செய்யும் இடத்தில் சேறும், சகதியுமாகவும் மற்றும் குப்பை கழிவுகளாகவும் இருக்கிறது. இங்கு பொதக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் சேகரை, அதங்குடி, வாழச்சேரி போன்ற பகுதியிலே வசிக்கக்கூடிய முஸ்லிம்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொதக்குடி மையவாடி இடத்திற்கு ஜலால் தெரு, சத்ரு தெரு சாலைகள் வழியாகவும் செல்வதற்கு இதுவும் பொது வழியாகவும் இருக்கிறது.

இப்பகுதியிலே தற்போது அடக்கம் செய்வதற்கு செல்ல முடியாத சூழ்நிலை அப்பகுதியிருந்து வருகிறது. சாலைகளில் மழைநீர் மற்றும் குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு, சாலையில் கழிவுநீர் தொட்டிகள் அமைப்பட்டு இருக்கிறது. இதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதக்குடி நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொதக்குடி மையவாடியில் மழை நீர் தேங்கி சேதமான சாலை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pothakudi Maiwadi ,Needamangalam ,Pothakudi Maiawadi ,Dinakaran ,
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி